நாவிதன்வெளியில் பிரமாண்ட பார்வையாளர் அரங்கு நிர்மாணிப்பு
பிராந்திய விளையாட்டுத் துறையை மேம்படுத்த முன்னாள் இராஜாங்க அமைச்சரான எச்.எம்.எம் ஹரீஸ்(HMM.Harees) திகாமடுல்ல மாவட்டம் முழுவதும் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.
அதன் தொடர்ச்சியாக நாவிதன்வெளி - அமீரலி விளையாட்டு மைதான அபிவிருத்தி பணிகளுக்காக கடந்த காலங்களில் நிறைய நிதி ஒதுக்கீடுகளை செய்திருந்தார்.
டீ- 100 திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட 5 மில்லியன் ரூபாய் விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட பார்வையாளர் அரங்கின் நிர்மாணப்பணிகளை பார்வையிட கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
சிறப்புத் திட்டம்
தற்போது நிர்மாணப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பார்வையாளர் அரங்கில் மேற்கொண்டு செய்ய வேண்டிய வேலைகள் சம்மந்தமாகவும், ஏனைய தேவைகள் சம்மந்தமாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த அபிவிருத்தி திட்டத்தின் மூலம் விளையாட்டு வீரர்களும், பாடசாலை மாணவர்களும் நிறைவான பலனை அடைவதுடன் எதிர்காலத்தில் விளையாட்டு போட்டிகள் மற்றும் பயிற்சிகளை பெற இது வசதியாக இருக்கும் என்றும் இந்த பார்வையாளர் அரங்கு நிர்மாண பணியானது அப்பிரதேச மக்களுக்கு மட்டுமல்ல ஏனைய பிரதேச வீரர்களுக்கும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





