வாழைச்சேனை ஓமனியாமடுவில் மீட்கப்பட்டுள்ள கைக்குண்டு

Sri Lanka Police Batticaloa Sri Lanka Police Investigation Eastern Province
By Rakshana MA Feb 12, 2025 02:00 PM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு (Batticaloa) - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓமனியாமடு பிரதேசத்தின் காணி ஒன்றில் இருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. 

இந்த கைக்குண்டானது நேற்று(11) மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

மரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

மேலதிக விசாரணை

குறித்த காணியில் துப்பரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கைக்குண்டு ஒன்று இனங்காணப்பட்டதையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.  

வாழைச்சேனை ஓமனியாமடுவில் மீட்கப்பட்டுள்ள கைக்குண்டு | Hand Grenade Recovered In Valaichchenai

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கைக்குண்டை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இம்மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலை மாற்றம்! வெளியான அறிவிப்பு

இம்மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலை மாற்றம்! வெளியான அறிவிப்பு

மின் துண்டிப்பால் ஏற்பட்ட நட்டம் : அமைச்சரவைப் பேச்சாளர் தகவல்

மின் துண்டிப்பால் ஏற்பட்ட நட்டம் : அமைச்சரவைப் பேச்சாளர் தகவல்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW