ஹமாஸ் அரசியல் தலைவர் படுகொலை: ரணில் கண்டனம்
ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா படுகொலை செய்யப்பட்டமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுடன் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ரணில் கண்டனம்
இது தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவிக்கையில், , இவ்வாறான செயற்பாடுகளை தாம் ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை என ஐயத்திற்கு இடமின்றி தெரிவித்துள்ளார்.
சர்வதேச சட்டம் மற்றும் நாடுகளின் இறையாண்மையை மதிப்பதன் முக்கியத்துவத்தை இஸ்மாயில் ஹனியா வலியுறுத்தி, மோதல்களுக்கு அமைதியான தீர்வுக்கு அழைப்பு விடுத்தார்.என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |