யஹியா சின்வரின் உடல் வேண்டும்! இஸ்ரேலை அதிர வைத்துள்ள ஹமாஸின் நிபந்தனை
யஹியா சின்வரின்(Yahya Sinwar) உடல் வேண்டும் என ஹமாஸ் முன்வைத்த நிபந்தனை ஆக்கிரமிப்பு இஸ்ரேலை அதிர வைத்துள்ளது.
முதற்கட்ட கைதிகள் விடுதலையின் போதே யஹியா சின்வரின் உடலை ஒப்படைக்க வேண்டும் என ஹமாஸ் வலியுறுத்தியதாக சவுதி ஊடகமொன்று செய்தி வெளியிட்டது.
அதே நேரம் இஸ்ரேல் அதிகாரிகள் இதற்கு தற்போது சாத்தியமில்லை என தெரிவித்துள்ளனர்.
யஹியா சின்வர்
எனினும், ஹமாஸ் எப்படியும் யஹியா சின்வரின் உடலை பெற்றுவிடும் என தெரிகின்றது.
யஹியாஸ் சின்வரின் பெற்றோர் பாலஸ்தீன நகரான மஜ்தல் அஸ்கலானைச் சேர்ந்தவர்கள்.1948 ஆம் ஆண்டு அந்த நகரத்தை ஆக்கிரமித்துக்கொண்ட இஸ்ரேல் அதற்கு அஸ்கலான் என பெயரிட்டது. அங்கிருந்த பாலஸ்தீனியர்கள் அகதிகளாக விரட்டப்பட்டனர் அவர்களில் சின்வரின் பெற்றோரும் ஒருவர்.

காசாவில் கான்யூனுஸ் சகதிகள் முகாமில் யஹியா சின்வர் பிறந்தார். காசா பல்கலைக்கழகத்தில் அரபு மொழியில் பட்டம் பெற்றார். படிக்கும்போதே விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்த அவர், இரண்டு இஸ்ரேலிய இராணுவ வீரர்களை கடத்தியதற்காக கைது செய்யப்பட்டார். அவருக்கு நான்கு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டது.
இதன்போது, இஸ்ரேல் சிறையில் 22 ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்தார்.
விடுதலைப்போராளி
இதனிடையே காசாவிலிருந்து சுரங்கம் தோண்டி இஸ்ரேல் எல்லைக்குள் சென்ற ஹமாஸ் படையினர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கிளட்ச் சாலட் என்ற இராணுவ வீரரை கடத்திக் கொண்டு காசா வந்தனர்.
அவரை விடுவிக்க வேண்டும் என்றால் 1027 பலஸ்தீனியர்களை விடுவிக்க வேண்டும் என பலஸ்தீனியர்களால் நிபந்தனை விதிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்டு இஸ்ரேல் 1027 பலஸ்தீனியர்களை விடுவித்தது அப்படி விடுவிக்கப்பட்டவர்களில் யஹியா சின்வரும் ஒருவர்.
இஸ்ரேலின் பல தாக்குதல்களில் இருந்து தப்பிய யஹியாஸ் சின்பவர் கடந்த ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி இஸ்ரேல் படையினருடன் நடந்த சண்டையில் போர்க்களத்தில் உயிரிழந்தார். அவரது கடைசி நிமிடங்கள் வீடியோக்களாக வைரலாகி வருகின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW | 
 
                 
                 
                                             
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    