புலமைப் பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களின் பெற்றோர்களுக்கான அறிவுறுத்தல்

Grade 05 Scholarship examination Sri Lankan Schools Education
By Laksi Sep 14, 2024 11:17 AM GMT
Laksi

Laksi

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை நிறைவடைந்தவுடன் மாணவர்களை சுதந்திரமாக நடமாட விடுமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு,  புலமைப்பரிசில் பரீட்சை காலத்தில் மாணவர்கள் இழந்த தங்களது குழந்தைப் பருவத்தை மீண்டும் அவர்களுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்திற்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை நாளைய தினம் நடைபெறவுள்ள நிலையில் இந்த விடயத்தை விசேட வைத்திய நிபுணர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

மன அழுத்தம்

இந்தநிலையில், புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னரும் பின்னரும் தங்களது பிள்ளைகளை ஏனைய பிள்ளைகளுடன் ஒப்பிடுவதை தவிர்க்குமாறும் வைத்தியர் பெற்றோர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

புலமைப் பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களின் பெற்றோர்களுக்கான அறிவுறுத்தல் | Grade 5 Scholarship Exam Warning Parents

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த சில மாதங்களாக புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாரான மாணவர்கள் அதிக மன அழுத்தத்தில் இருந்தனர். இனி மாணவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டாம்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சை 

பரீட்சை எழுதிய பின், பரீட்சை வினாத்தாளை மீண்டும் மாணவர்களிடம் கொடுத்து, அவர்களை எழுத வைத்து, விடைகள் சரியாக உள்ளதா என சோதித்து பார்ப்பதில் பலனில்லை.

புலமைப் பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களின் பெற்றோர்களுக்கான அறிவுறுத்தல் | Grade 5 Scholarship Exam Warning Parents

புலமைப்பரிசில் பரீட்சை என்பது மாணவர்களின் வாழ்வில் சந்திக்கும் இடையூறுகளில் ஒன்று. வாழ்க்கையில் இது போன்ற அனுபவங்கள் இன்னும் அதிகமாக இருக்கும் என்பதை மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு கூறி அவர்களை பலப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவுக்கு மக்களின் பேராதரவு கிடைத்துள்ளது: ரவூப் ஹக்கீம்

சஜித் பிரேமதாசவுக்கு மக்களின் பேராதரவு கிடைத்துள்ளது: ரவூப் ஹக்கீம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW