எதிர்க்கட்சிக்கான உரிமையை அரசாங்கம் தர மறுத்துள்ளது: இம்ரான் மகரூப் பகிரங்கம்

Trincomalee Anura Kumara Dissanayaka Government Of Sri Lanka Imran Maharoof Climate Change
By Laksi Dec 02, 2024 04:00 PM GMT
Laksi

Laksi

ஆளுங்கட்சி பிரதிநிதிகளுக்கு கிடைக்கும் முக்கியம் எதிர்க்கட்சியாகிய எமக்கு கிடைக்காமல் இருப்பது மிகவும் கவலையளிக்கின்றது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் (Imran Maharoof)தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகங்களுக்கு இன்று (2)  கருத்துத் தெரிவித்த அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,சீரற்ற காலநிலையை அடுத்து அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான கூட்டமொன்று கடந்த வெள்ளிக்கிழமை (28) திருகோணமலை (Trincomalee) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 203 ஆவது கொடியேற்ற விழா ஆரம்பம் !

கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 203 ஆவது கொடியேற்ற விழா ஆரம்பம் !

அரசாங்கம்

ஆளுங்கட்சி பிரதிநிதிகள் இக்கூட்டத்தில கலந்து கொண்டுள்ளனர். இக் கூட்டத்திற்கு இம்மாவட்ட மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது மிகவும் கவலையான செய்தியாகும்.

எதிர்க்கட்சிக்கான உரிமையை அரசாங்கம் தர மறுத்துள்ளது: இம்ரான் மகரூப் பகிரங்கம் | Govt Denies Right To Opposition Imran

திருகோணமலை மாவட்ட மக்களின் வாக்குகளினால் தான் நானும் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளேன்.

எனவே, பாதிக்கப்பட்ட எனது மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்த வேண்டியது எனது கடமையாகும். இந்த உரிமையை அரசாங்கம் எனக்கு மறுத்துள்ளது.இதனால் எனது மக்களின் பாதிப்புத் தொடர்பாகவும், மீள்கட்டுமானம் தொடர்பாவும் தகவல்கள் பெறப்படுவது மறுக்கப்பட்டுள்ளது.

வளமான நாடு என்ற கோசத்துடன் ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் இப்படி மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயற்பட்டால் எப்படி வளமான நாட்டை உருவாக்க முடியும் எனக் கேட்க விரும்புகின்றேன் என்றார்.

உயிரிழந்த மத்ரஸா மாணவர்களின் வீடுகளுக்கு ரிஷாட் எம்.பி விஜயம்

உயிரிழந்த மத்ரஸா மாணவர்களின் வீடுகளுக்கு ரிஷாட் எம்.பி விஜயம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW