கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 203 ஆவது கொடியேற்ற விழா ஆரம்பம் !

Batticaloa Eastern Province Kalmunai
By Laksi Dec 02, 2024 12:14 PM GMT
Laksi

Laksi

கல்முனை (Kalmunai) கடற்கரைப் பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்காவில் 203 ஆவது கொடியேற்ற விழா இன்று (2) திங்கட்கிழமை ஆரம்பமானது.

இந்த நிகழ்வானது க்ஷாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவாக அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர மக்களால் ஒவ்வொரு வருடமும் நடாத்தப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில், கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் இருந்து புனித கொடியானது உலமாக்கள், பக்கீர் ஜமாஅத்தினர், நிர்வாகிகள், ஊர் மக்கள் புடைசூழ தீன் கலிமா முழக்கத்துடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கடற்கரைப் பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்கா மினாராக்களில் ஏற்றி வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த மத்ரஸா மாணவர்களின் வீடுகளுக்கு ரிஷாட் எம்.பி விஜயம்

உயிரிழந்த மத்ரஸா மாணவர்களின் வீடுகளுக்கு ரிஷாட் எம்.பி விஜயம்

கந்தூரி அன்னதானம் 

இன்று கொடி ஏற்றிய தினத்தில் இருந்து தொடர்ந்து 12 நாட்களுக்கும் பாதுஷா ஷாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்) அன்னவர்களின் மீதான புனித மௌலித் ஷரீப் பாராயணம், பக்கீர் ஜமாஅத்தினரின் புனித ரிபாஈ ராதிப், உலமாப் பெருமக்களின் சன்மார்க்கச் சொற்பொழிவு என்பன இடம்பெறவுள்ளது.

கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 203 ஆவது கொடியேற்ற விழா ஆரம்பம் ! | Flag Hoisting Ceremony Of Kalmunai Beach Mosque

அத்தோடு எதிர்வரும் டிசம்பர் 14 ஆம் திகதி கொடி இறக்க நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன் அன்றைய தினம் மாபெரும் கந்தூரி அன்னதானம் வழங்கி வைக்கப்படவுள்ளது.

இன்றைய கொடி ஏற்றிய நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், அரச உயர் அதிகாரிகள், உலமாக்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வெள்ள அனர்த்தத்தின் பின்னர் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வெள்ள அனர்த்தத்தின் பின்னர் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மட்டக்களப்பில் வெள்ள நிலவரம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

மட்டக்களப்பில் வெள்ள நிலவரம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery