அவசரமாக கடவுச்சீட்டு பெறவுள்ளோருக்கு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு

Vijitha Herath Sri Lanka Passport
By Shalini Balachandran Oct 29, 2024 08:02 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

அத்தியாவசிய தேவைகளுக்காகக் கடவுச்சீட்டு தேவைப்படுகின்றவர்கள் மாத்திரம் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளப் பிரவேசிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போது கடவுச்சீட்டுகளை அச்சிடுவதற்கான வெற்றுப் புத்தகங்களின் கிடைப்பனவு மட்டுப்படுத்தப்பட்டதாக உள்ளது.

பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு: தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு: தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

வெளிநாட்டு நிறுவனம் 

வெளிநாட்டு நிறுவனம் ஒன்றினால் இது அச்சிடப்பட்டு வழங்கப்படுகிறது இது கட்டம் கட்டமாகவே இலங்கைக்குக் கிடைக்கிறது இதனால் கடவுச்சீட்டுகளை வழங்குவதில் சிக்கல் உள்ளது.

அவசரமாக கடவுச்சீட்டு பெறவுள்ளோருக்கு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு | Government Notice To New Passport Holders

எனவே, அத்தியாவசியமான தேவை உடையவர்கள் மாத்திரம் கடவுச் சீட்டைப் பெற்றுக் கொள்ளப் பிரவேசிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மாறாக அனைவரும் கடவுச் சீட்டைப் பெற்றுக் கொள்வதற்காகப் பிரவேசித்து, நிலவுகின்ற நெரிசலில் அசௌகரியங்களுக்கு உள்ளாக வேண்டாம்” என அவர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறித்து நளின் ஜயசுந்தர வெளியிட்டுள்ள தகவல்

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறித்து நளின் ஜயசுந்தர வெளியிட்டுள்ள தகவல்

புதிய அரசாங்கம்

அத்தோடு, புதிதாக விநியோகிக்கப்படுகின்ற கடவுச் சீட்டுகளில் மொழி முன்னுரிமை மாற்றப்பட்டு சிங்கள மொழி இரண்டாவதாகவும், தமிழ் மொழி மூன்றாவதாகவும் அச்சிடப்பட்டுள்ளமை போன்ற விடயங்கள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

அவசரமாக கடவுச்சீட்டு பெறவுள்ளோருக்கு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு | Government Notice To New Passport Holders

இதற்குப் பதில் வழங்கிய அமைச்சர் விஜித்த ஹேரத், குறித்த கடவுச் சீட்டுகளை புதிய அரசாங்கம் வடிவமைக்கவில்லை என்றும் மற்றும் கடந்த அரசாங்கத்தினால் வடிவமைக்கப்பட்ட இந்த கடவுச் சீட்டுகளை மாற்றியமைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், ஆறு மாதங்களின் பின்னர் புதிய கடவுச் சீட்டுகளுக்கான கொள்வனவு ஆணை பிறப்பிக்கும் போது, அதன் வடிவமைப்பை மாற்றுவதற்கு அமைச்சரவை தீர்மானம் எடுத்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

பேருவளையில் மாணவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கரவண்டி சாரதி கைது

பேருவளையில் மாணவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கரவண்டி சாரதி கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW