நாட்டில் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள திட்டம்

Sri Lanka Government Of Sri Lanka Sri Lankan Peoples Medicines Nalinda Jayatissa
By Rakshana MA Feb 27, 2025 03:40 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையில் அரச மருந்தகங்கள் இல்லாத நகரங்களில் அரச மருந்தகங்களை விரைவாக நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் நடைபாதை பவணி

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் நடைபாதை பவணி

திட்டம்

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

''உங்கள் நகரத்தில் ஒரு மருந்தகம்” எனும் திட்டத்தின் கீழ், இவ்வாறு அரச மருந்தகங்கள் இல்லாத நகரங்களில் அரச மருந்தகங்களை விரைவாக நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், “உங்கள் நகரத்தில் ஒரு மருந்தகம்” திட்டம் அவசரத் திட்டமாகத் தொடங்கப்பட்டுள்ளது.

நாட்டில் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள திட்டம் | Government Establishment Pharmacies At Country

இந்த துரிதப்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ், வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் மருந்தகங்கள் இல்லாத மாவட்டங்கள் உட்பட பிற மாகாணங்களில் அரச மருந்தகங்களை நிறுவுவதற்கான அவசரத் திட்டங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து தசாப்தங்களாக, நாடு முழுவதும் 64 அரச மருந்தகங்களை நிறுவுவதற்கு அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், இந்த அரச மருந்தகங்கள் அனைத்தும் நாட்டு மக்களுக்கு பயனுள்ள, தரமான மற்றும் தொடர்ச்சியான சேவையை வழங்கும் என குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் வனவளத்திணைக்கள அதிகாரிகளின் அடாவடித்தனம்

மட்டக்களப்பில் வனவளத்திணைக்கள அதிகாரிகளின் அடாவடித்தனம்

தனியார்துறை சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான அதிருப்தி

தனியார்துறை சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான அதிருப்தி

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW