சோள இறக்குமதி குறித்து அராங்கத்தின் முக்கிய தீர்மானம்

Corn Sri Lankan Peoples Sri Lanka Government Ministry of Agriculture
By Shalini Balachandran Jul 07, 2025 09:26 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

மூன்று இலட்சம் மெட்ரிக் தொன் சோளத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த  விடயத்தினை விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த (K. D. Lalkantha) தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட மேம்பாட்டுக் குழு கூட்டத்திற்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இன்றைய தங்க நிலவரம்: வெளியான தகவல்

இன்றைய தங்க நிலவரம்: வெளியான தகவல்

சோள உற்பத்தி 

அவர் மேலும் தெரிவிக்கையில், ”உள்ளூரில் சோள உற்பத்தி தேவைக்கு போதாத நிலை காணப்படுவதால், சந்தையில் விலை அதிகரிக்கிறது.

சோள இறக்குமதி குறித்து அராங்கத்தின் முக்கிய தீர்மானம் | Government Decides To Import Corn

தேவையற்ற விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும் முன், அரசாகத் தேவைப்படும் அளவுக்கு சோளத்தை இறக்குமதி செய்வதையே முடிவு செய்துள்ளோம்.

அரசின் இந்த நடவடிக்கை, அத்தியாவசிய பொருட்களின் விலை நிலைத்தன்மையை பாதுகாக்கும் ஒரு முக்கிய முயற்சியாகவும், நுகர்வோருக்கு நிவாரணமாகவும் கருதப்படுகிறது.” என தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : சடுதியாக குறைந்த தேங்காய் விலை

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : சடுதியாக குறைந்த தேங்காய் விலை

நபிவழி மருத்துவம்- வெந்தயம்

நபிவழி மருத்துவம்- வெந்தயம்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW