நபிவழி மருத்துவம்- வெந்தயம்

Islam
By Fathima Jul 07, 2025 08:48 AM GMT
Fathima

Fathima

நபி(ஸல்) அவர்கள், மக்காவில் இருந்த சஅத் பின் அபீவக்காஸ்(ரலி) அவர்களை நலம் விசாரிக்க சென்றார்கள்.

அப்போது அவர்கள், ”இவருக்காக மருத்துவரை அழையுங்கள்” என்று கூற ஹாரிஸ் பின் கல்தா என்பவர் அழைக்கப்பட்டார்.

அவர் வந்து பார்த்துவிட்டு ”இவருக்கு ஒன்றுமில்லை, இவருக்கு வெந்தயக்கஞ்சி காய்ச்சி கொடுங்கள்” என்று அறிவுரை வழங்கினார்.

வெந்தயக்கஞ்சி என்பது அஜ்வா வகை பேரீச்சம்பழங்களோடு வெந்தயத்தை சேர்த்து நன்றாக காய்ச்ச வேண்டும்.

ஆகவே அவருடைய அறிவுரைப்படி அவருக்கு வெந்தயக்கஞ்சி காய்ச்சி கொடுக்கப்பட்டது, அதன்பின் அவர் குணமடைந்தார்.

வெந்தயத்தின் ஆற்றல் இரண்டாம் நிலை வெப்பத்தன்மை உடையதும் முதலாம் நிலை காய்வுத்தன்மை உடையதும் ஆகும்.

நபிவழி மருத்துவம்- வெந்தயம் | Fenugreek Benefits In Tamil In Islam

இதனை தண்ணீரில் போட்டு காய்ச்சி பருகினால் தொண்டை, நெஞ்சு, வயிறு ஆகியவற்றை மென்மைப்படுத்தும்.

இருமல், வறட்டு இருமல், மூச்சுத்திணறல், மூச்சுவிட இயலாமை உள்ளிட்டவற்றை எளிதாக்கும், ஆண்மையை பலப்படுத்தும்.

வாயுத்தொல்லை, சளி, மூலம் ஆகியவற்றிற்கு உகந்தது, குடல்களில் ஏற்படக்கூடிய உணவுச்சத்தை தக்கவைத்துக்கொள்ளக்கூடியது.

மேலும் நெஞ்சில் ஒட்டிக்கொண்டுள்ள சளியை விரட்டக்கூடியது. கொக்கிக் புழுக்கள், குடல் நோய்கள், ஆகியவற்றிற்கு பயனளிக்கும்.

நபிவழி மருத்துவம்- கருஞ்சீரகம்

நபிவழி மருத்துவம்- கருஞ்சீரகம்


இந்த நோய்களுக்கான மருந்தை வெறும் வயிற்றில் நெய்யோடு பயன்படுத்த வேண்டும். ஐந்து கரண்டி அளவிற்கு வெந்தயத்தண்ணீரை குடித்து வந்தால் மாதவிடாய் உதிரப்போக்கை சீராக்கும், வெந்தயத்தை நீரில் போட்டு காய்ச்சி அந்த நீரை தலையில் தேய்த்து குளித்தால் தலைமுடியை அடர்த்தியாக்கும்.

சிவப்பு பருக்களுடன் கூடிய தோல்நோய்யை போக்கும், வெந்தயத்தை அரைத்து தூளாக்கி அதைச் சமையல் காடியில் கலந்து கட்டுப்போட்டால் அது கல்லீரல் வீக்கத்த்தை போக்கிவிடும்.

வெந்தயக்கஞ்சி செய்யப்பட்ட தண்ணீரில் ஒரு பெண் அமர்ந்தால் கர்ப்பப்பையில் ஏற்படக்கூடிய தற்காலிக வலி குணமாகும்.

மிதமான சூட்டோடு கடினமான வீக்கங்கள் உள்ள பகுதிகளில் வெந்தயத்தை பக்குவப்படுத்தி கட்டினால் அந்த வீக்கங்கள் வற்றி காணாமல் போய்விடும்.

நபிவழி மருத்துவம்- வெந்தயம் | Fenugreek Benefits In Tamil In Islam

வெந்தயத்தை காய்ச்சி அந்த நீரை பருகினால் வாய்வுத் தொல்லையால் ஏற்படுகின்ற கடுமையான வயிற்று வலி குணமாகும், குடல்களை சீராக்கும்.  

பேரீச்சம்பழத்தோடு அல்லது தேனோடு அல்லது அத்திப்பழத்தோடு சேர்த்து சமைக்கப்பட்ட வெந்தயத்தை வாயால் மென்று சாப்பிட்டால் அது நெஞ்சிலும் இரைப்பையிலும் ஒட்டிக்கொண்டுள்ள சளியை நீக்கிவிடும்.

மேலும் அதனால் ஏற்பட்ட தொடர்படியான இருமலுக்கும் நல்லது, வெந்தயக்கஞ்சியின் மூலம் நிவாரணம் தேடுங்கள் என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக காசிம் பின் அப்திர் ரஹ்மான் என்பாரிடமிருந்து அறிவிக்கப்படுகிறது.