போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடன் லொறி மோதி விபத்து

Ampara Sri Lanka Police Investigation Eastern Province
By Laksi Aug 13, 2024 01:10 PM GMT
Laksi

Laksi

அம்பாறை- பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மீன் ஏற்றிச் சென்ற சிறிய ரக லொறியுடன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தானது இன்று (13) பாண்டிருப்பு மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதி வழியே அக்கரைப்பற்று பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடன், மட்டக்களப்பு கல்முனை வீதி வழியாக வந்த சிறிய ரக மீன் ஏற்றிச் சென்ற லொறி மோதி விபத்து ஏற்பட்டுள்ளதுடன் பேருந்து பகுதிஅளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்முனை பிராந்தியத்துக்கு சுகாதார அமைச்சினால் 28 வைத்தியர்கள் நியமனம்

கல்முனை பிராந்தியத்துக்கு சுகாதார அமைச்சினால் 28 வைத்தியர்கள் நியமனம்

மேலதிக விசாரணை

இதனையடுத்து, வாகன சாரதிகள் காயமடைந்த நிலையில் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடன் லொறி மோதி விபத்து | Government Bus Collides With A Truck In Ampara

இதேவேளை, சிறிய ரக மீன் ஏற்றிச் செல்லும் லொறி வேகக் கட்டுப்பாட்டை மீறி பயணித்தமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இருவர் படுகாயம்

மட்டக்களப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இருவர் படுகாயம்

இஞ்சி இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

இஞ்சி இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW