ஒழிக்கப்பட வேண்டிய இலஞ்சம் துணிந்து செயல்படும் அரசாங்கம் : முனீர் முழப்பர்
இலங்கை வங்குரோத்து நிலையை அடைய காரணம் இந்த நாட்டில் தலைவர்களின் இலஞ்சம், ஊழல் மற்றும் பொதுமக்கள் சொத்துக்களை கொள்ளையடித்தது தான் என தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் முனீர் முழப்பர்(Muneer Mulaffar) தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பதவி ஏற்றதன் பின்னர் அவ்வாறான எந்தவொரு ஊழல் குற்றச்சாட்டுக்களும் நிர்வாக மட்டங்களில் இருந்து பதிவாகவில்லை.
ஊழலை புறந்தள்ள முயற்சிக்கும் அரசாங்கம்
ஜனாதிபதி இதற்கெல்லாம் முன்னுதாரணமாக அமைந்த பொருளாதார ரீதியில் வீழ்ச்சி கண்டிருக்கும் ஒரு நாடு என்ற வகையில் சுகபோகங்களை எல்லாம் புறந்தள்ளி செயற்பட வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கின்றார்.
அத்துடன் தமக்கு தரப்பட்ட பணிகளை செய்வதற்கு தேவையானவற்றை மாத்திரமே பெற்றுக்கொண்டு நாங்கள் இப்போது செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.
ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் என மேல் மட்டத்தில் இருக்கும் அனைவரும் ஊழல் இல்லாமல் பொது மக்களின் சொத்துக்களை வீண்விரயம் செய்யாமல் சிக்கனத்துடன் செயலாற்றுவதை பார்க்கும் போது கீழ் மட்டத்திலுள்ள அதிகாரிகள் எல்லோருமே அதனை தான் பின்பற்றுவார்கள்.
மாற்றத்திற்கான அடித்தளம்
ஊழல் ஒழிப்பினை சட்டரீதியாக கடுமையாக நடைமுறைப்படுத்தினாலும் உயர்மட்ட அதிகாரிகளும் தங்களை அவ்வாறு மாற்றிக்கொள்ளாவிட்டால் அதில் பயன்இருக்கப்போவதில்லை.
ஆனால், தற்போதுள்ள நிலையில் அரசு மட்டங்களிலுள்ள எல்லோருமே ஊழல் அற்றவர்களாக இருக்கும் போது உயர் அதிகாரிகளும் அதை பின்பற்றுவதை தவிர வேறு வழி இருக்காது என்பது தான் எனது கருத்து என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |