அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட இழப்பீடு : அதிருப்தியில் விவசாயிகள்

Sri Lanka Government Of Sri Lanka Climate Change Money Weather
By Rakshana MA Dec 01, 2024 11:36 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக விவசாயிகளின் நிலங்கள் உட்பட பயிர்களும் பாதிக்கப்பட்ட நிலையில் அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையானது போதுமானதாக இல்லை என கமநல அமைப்புகள் (Department of Agrarian Development) தெரிவித்துள்ளன.

குறித்த நிவாரணமானது அதிகளவில் பாதிக்கப்பட்ட 6வகையான பயிர்கள் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சீரற்ற காலநிலை காரணமாக வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மொத்தமாக 338,000 ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுனாமி அனர்த்தம் குறித்து பரவும் தகவல்கள்: மக்களுக்கு வெளியான அறிவிப்பு

சுனாமி அனர்த்தம் குறித்து பரவும் தகவல்கள்: மக்களுக்கு வெளியான அறிவிப்பு

ஒதுக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை

இதன்படி, விவசாயத்துறை பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன நேற்று முன்தினம்(29) கருத்து வெளியிட்ட போது,

நெல், சோளம், உருளைக்கிழங்கு, சோயா, மிளகாய் மற்றும் பெரிய வெங்காயம் போன்ற பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்காக ஏக்கர் ஒன்றுக்கு 40,000 ரூபாவுக்கு மேற்படாத தொகை இழப்பீடாக வழங்கப்படும் என  அறிவித்திருந்தார்.

அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட இழப்பீடு : அதிருப்தியில் விவசாயிகள் | Farmers Discontent Over Compensation Nowadays

இந்நிலையிலேயே, குறித்த இழப்பீட்டுத் தொகை தமக்கு போதுமானதாக இல்லை என கமநல அமைப்புகள் தெரிவித்துள்ளன. 

மேலும், காலநிலை அனர்த்தங்களால் பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை அரசாங்கம் உரிய முறையில் மதிப்பீடு செய்ய வேண்டும் எனவும் கமநல அமைப்பு கோரியுள்ளனர்.

இதேவேளை, சீரற்ற காலநிலையினால் தங்களது பயிர்ச் செய்கைகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளதோடு அதற்காக அரசாங்கம் உரிய வகையில் நட்டஈடு வழங்க வேண்டும் எனவும் கமநல அமைப்பினால் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இன்றைய நாளுக்கான காலநிலை அறிவிப்பு

இன்றைய நாளுக்கான காலநிலை அறிவிப்பு

இன்றைய நாளுக்கான காலநிலை அறிவிப்பு

இன்றைய நாளுக்கான காலநிலை அறிவிப்பு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW