ஆசிரியர் சம்பள அதிகரிப்பு விவகாரம்: அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

Ranil Wickremesinghe Government Employee Ceylon Teachers Service Union Teachers
By Shalini Balachandran Sep 05, 2024 08:58 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

ஆசிரியர்கள் உட்பட அரச ஊழியர்களின் உத்தேச சம்பள அதிகரிப்பு தொடர்பான சுற்றறிக்கையை வெளியிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுற்றறிக்கையை எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்து தகவலை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin) தெரிவித்துள்ளார்.

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் பலர் கைது..!

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் பலர் கைது..!

தேர்தல் சட்டத்தை மீறும் செயல்

சுற்றறிக்கையை வெளியிடுவது தேர்தல் சட்டத்தை மீறும் செயல் அல்ல. எனவே அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியின் உண்மைத்தன்மை வெளிப்படுத்தப்படவேண்டும்.

ஆசிரியர் சம்பள அதிகரிப்பு விவகாரம்: அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை | Gov Teachers Proposed Salary Pensioners Allowance

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசியல் மேடைகளில் கூறுவது உண்மையாக இருக்குமானால், தேர்தல் திகதிக்கு முன்னதாக சுற்றறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும்.

ஏற்கனவே ஓய்வூதியக் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எனவே அரச பணியாளர்களுக்கான சுற்றறிக்கையை வெளியிட முடியும்.

ஒவ்வொரு ஜனாதிபதி வேட்பாளரும் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை இலக்காகக் கொண்டு அறிக்கைகளை வெளியிடுகின்றனர்.

கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை

எனினும் இது தொடர்பான அறிக்கைகளை வெளியிடும் போது ஜனாதிபதி ரணில் கணிசமான இடத்தைப் பெற்றுள்ளார்.

ஆசிரியர் சம்பள அதிகரிப்பு விவகாரம்: அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை | Gov Teachers Proposed Salary Pensioners Allowance

சம்பள முரண்பாடுகளை நீக்கக் கோரி ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கடந்த ஒக்டோபர் 24ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோம் அதன்போது, அரசாங்கம் தீர்வுகளை வழங்கவில்லை, ஆனால் அவர்களுக்கு எதிராக கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களையே அரசாங்கம் நடத்தியது.

எனினும் தற்போது அரசாங்கம் உறுதிமொழிகளை வழங்கியுள்ளது. இதனை அரசாங்கம் உறுதிப்படுத்தும் வகையில் வழங்கவேண்டும்.

சம்பள அதிகரிப்பு தொடர்பான சுற்றறிக்கையை எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுங்கள்” இவ்வாறு ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

யுக்திய சுற்றிவளைப்பில் 672 பேர் கைது

யுக்திய சுற்றிவளைப்பில் 672 பேர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW