யுக்திய சுற்றிவளைப்பில் 672 பேர் கைது

Sri Lanka Sri Lanka Police Investigation Crime
By Laksi Sep 05, 2024 08:22 AM GMT
Laksi

Laksi

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலத்தில் 672 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 664 ஆண்களும், 08 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் பலர் கைது..!

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் பலர் கைது..!

போதைப்பொருட்கள் மீட்பு 

இதனையடுத்து, சந்தேகநபர்களிடமிருந்து 165 கிராம் 736 மில்லி கிராம் ஹெரோயின், 211 கிராம் 79 மில்லி கிராம் ஐஸ், 2,151 கஞ்சா செடிகள் மற்றும் 612 கிராம் 795 மில்லி கிராம் கஞ்சா ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

யுக்திய சுற்றிவளைப்பில் 672 பேர் கைது | Yukthiya Operation Sri Lanka

மேலும்,  கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களில் 22 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ள 16 பேரை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விசேட விடுமுறை: வெளியான அறிவிப்பு

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விசேட விடுமுறை: வெளியான அறிவிப்பு

அழகு நிலையங்களில் பயன்படுத்தப்படும் அனைத்து சவர்க்காரங்கள், ஷாம்புகள் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கை

அழகு நிலையங்களில் பயன்படுத்தப்படும் அனைத்து சவர்க்காரங்கள், ஷாம்புகள் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW