தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தரவை மீறி வெளியான சுற்றறிக்கை

Sri Lanka Election
By Shalini Balachandran Aug 08, 2024 07:50 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

தேர்தல் காலத்தில் ஓய்வூதியர்களுக்கு 3000 ரூபா கொடுப்பனவை வழங்குவதை தற்காலிகமாக நிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள போதிலும், குறித்த கொடுப்பனவை வழங்குவது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளரால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கைகள் அமைச்சின் செயலாளர்களினால் மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுக்கு நேற்று வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, செப்டம்பர் மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் உரிய கொடுப்பனவு வழங்கப்படும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனையிலிருந்து முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் விடுதலை

மரண தண்டனையிலிருந்து முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் விடுதலை

ஜனாதிபதித் தேர்தல்

ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை அரசாங்க ஓய்வூதியர்களுக்கு 3000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை தற்காலிகமாக நிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்திருந்தது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தரவை மீறி வெளியான சுற்றறிக்கை | Gov Circular Issued For 3000 Allowance Pensioners

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற அமைச்சுக்களின் செயலாளர்கள் கூட்டத்திலும் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், இந்த உத்தரவை மீறி உரிய கொடுப்பனவை வழங்குமாறு சுற்றறிக்கையை வெளியிடுவது தேர்தல் சட்டத்திற்கு எதிரானது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  

வீழ்ச்சி காணும் தங்க விலை

வீழ்ச்சி காணும் தங்க விலை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW