உச்சம் தொட்ட தங்க விலை..! வெளியான அறிவிப்பு

Gold Price in Sri Lanka Sri Lanka Today Gold Price Sri Lankan Peoples Money
By Rakshana MA May 26, 2025 07:48 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதன்படி, தங்கத்தின் விலை நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (26) சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது கடந்த வாரம் 988,072 ரூபாவாக காணப்பட்ட நிலையில், இன்று 1,005,827 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

அக்கறைப்பற்று வாள்வெட்டு சம்பவம் : போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள்

அக்கறைப்பற்று வாள்வெட்டு சம்பவம் : போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள்

இன்றைய நிலவரம்

இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 35,480 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 283,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.

உச்சம் தொட்ட தங்க விலை..! வெளியான அறிவிப்பு | Gold Price Today In Sri Lanka

அதேபோல் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 32,530 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 260,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 31,050 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 248,400 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிள் விபத்து: இருவர் பலி

மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிள் விபத்து: இருவர் பலி

செட்டியார் தெரு தங்க விலை

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின்படி 24 கரட் தங்கப் பவுண் 266,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

உச்சம் தொட்ட தங்க விலை..! வெளியான அறிவிப்பு | Gold Price Today In Sri Lanka

இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது 246,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலின் தாக்குதலில் பெண் மருத்துவரும் 9 பிள்ளைகளும் பலி..!

இஸ்ரேலின் தாக்குதலில் பெண் மருத்துவரும் 9 பிள்ளைகளும் பலி..!

அரபிக் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கப்பல்

அரபிக் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கப்பல்

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW