உச்சத்தை தொடும் தங்கத்தின் விலை! வாங்கவுள்ளோருக்கான அறிவித்தல்
இலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இதன்படி, இன்று (11) தங்கத்தின் விலை சற்று உச்சத்தை தொட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 876,410 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.
தங்கத்தின் இன்றைய நிலவரம்
இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 30,920 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 247,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 28,350 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 226,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 27,060 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 216,450 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளது.
செட்டியார் தெரு தங்க விலை
அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 232,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது 214,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.
எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |