ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகளில் மாற்றம்...! வெளியான அறிவிப்பு

Sri Lanka
By Shalini Balachandran Mar 18, 2026 12:17 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) சேவைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

அரச விடுமுறை நாட்களாக நாளை (18) முதல் அனைத்துப் புதன்கிழமைகளும் கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இந்த மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், EPF நன்மைகளைப் பெறுதல், 30 சதவீத முற்பணம் பெறுதல், மரணமடைந்த உறுப்பினர்களின் கோரிக்கைகளை முன்வைத்தல் மற்றும் AH பதிவுகள் போன்ற சேவைகளுக்காகப் புதன்கிழமைகளில் ஏற்கனவே நேர ஒதுக்கீடு (Appointments) செய்துள்ள உறுப்பினர்கள், அதனை மீள மாற்றியமைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தாமதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, எதிர்வரும் நான்கு வேலை நாட்களுக்குள் (வியாழன், வெள்ளி, திங்கள் அல்லது செவ்வாய்) தமக்கான நேரத்தை மீள ஒதுக்கிச் சேவைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், பொதுச் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் புதிய விடுமுறை மாற்றத்திற்கு அமைய, உறுப்பினர்கள் முன்கூட்டியே திட்டமிட்டுச் செயற்படுமாறு தொழில் ஆணையாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொதுப் போக்குவரத்து குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு

பொதுப் போக்குவரத்து குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு

இலங்கை கடல் எல்லை தாக்குதலுக்கு கொடிய பதிலடி கொடுக்கப்படும்! ஈரான் பகிரங்கம்

இலங்கை கடல் எல்லை தாக்குதலுக்கு கொடிய பதிலடி கொடுக்கப்படும்! ஈரான் பகிரங்கம்

QR முறை: ஒரு அடையாள அட்டையின் மூலம் ஒரு வாகனத்தை மட்டுமே பதிவு செய்யலாம் - புதிய தகவல்

QR முறை: ஒரு அடையாள அட்டையின் மூலம் ஒரு வாகனத்தை மட்டுமே பதிவு செய்யலாம் - புதிய தகவல்