தங்கத்தின் சடுதியான அதிகரிப்பிற்கு வெளியான காரணம்

Gold Price in Sri Lanka Today Gold Price Gold smuggling Gold
By Rakshana MA Apr 22, 2025 06:37 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையில் இந்த வருடத்தில் மட்டும் தங்கத்தின் விலை சுமார் 60,000 ரூபாய் அதிகரித்துள்ளதாக தேசிய இரத்தினக்கல், ஆபரணங்கள் அதிகாரசபை தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரிக் கொள்கையால் கடந்த வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை சுமார் 15,000 ரூபாய் அதிகரித்துள்ளதாக சபையின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க பண்டார தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஒரு வார காலப்பகுதியில் மட்டும் தங்கத்தின் பாரியளவில் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூதூரில் வாய்க்காலுக்குள் தடம் புரண்டு வீழ்ந்த கார்

மூதூரில் வாய்க்காலுக்குள் தடம் புரண்டு வீழ்ந்த கார்

தங்கத்தின் விலை

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த வருடத்தின் 4 மாதங்களில் 60000 ரூபாய் வரை தங்கத்தின் விலை அதிகரிப்பதற்கு பிரதான காரணமாக உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பாகும்.

தங்கத்தின் சடுதியான அதிகரிப்பிற்கு வெளியான காரணம் | Gold Price Increased In Sri Lanka

அத்தோடு தங்கத்தின் கேள்வி அதிகரித்துள்ளமையினால் தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றது.

இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் புகைப்பட ஊடகவியலாளர் குடும்பத்துடன் பலி

இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் புகைப்பட ஊடகவியலாளர் குடும்பத்துடன் பலி

மத்திய வங்கி

இதேவேளை, இந்த ஆண்டு இறுதிக்குள் உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமார் 4,000 அமெரிக்க டொலர்களாக உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தங்கத்தின் சடுதியான அதிகரிப்பிற்கு வெளியான காரணம் | Gold Price Increased In Sri Lanka

எதிர்காலத்தில் தங்கத்தின் விலை குறைய வேண்டுமெனில் நாட்டின் மத்திய வங்கி தங்க இருப்புக்களை வெளியிட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டிற்கு வரும் பயணிகள் தொடர்பில் சுற்றுலாத்துறை வெளியிட்ட கணிப்பு!

நாட்டிற்கு வரும் பயணிகள் தொடர்பில் சுற்றுலாத்துறை வெளியிட்ட கணிப்பு!

இன்று பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும்

இன்று பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும்

      நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW