இஸ்லாமிய கடும் போக்குடன் முனீர் முழப்பர்.. ஞானசார தேரர் குற்றச்சாட்டு

Easter Sri Lankan Peoples Easter Attack Sri Lanka Galagoda Aththe Gnanasara Thero
By Rakshana MA May 21, 2025 04:07 AM GMT
Rakshana MA

Rakshana MA

தற்போதைய அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக கடமையாற்றி வரும் முனீர் முழப்பர் இஸ்லாமிய கடும்போக்குவாதத்தை ஊக்குவிக்கும் நபர் என  பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் அரசாங்கத்துடன் இருப்பதாக தெரவிக்கும் போது அவர் மேலுள்ளவாறு குறிப்பிட்டுள்ளார்.

மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டிய தேவையில்லை

மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டிய தேவையில்லை

கடும்போக்கு வாதம் 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இஸ்லாமிய கடும்போக்குவாத கொள்கையுடைய பலர் ஆளும் கட்சிக்குள் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

இஸ்லாமிய கடும் போக்குடன் முனீர் முழப்பர்.. ஞானசார தேரர் குற்றச்சாட்டு | Gnanasara Thero Statements About Easter Attack

நிட்டம்புவ பகுதியில் தன்வீர் அகடமியின் பொறுப்பாளராக முனீர் கடமையாற்றி வருகிறார், கடவுளுக்காக உயிர்த்தானம் செய்ய வேண்டுமென வலியுறுத்தும் குழுவொன்றை முனீர் வழிநடத்துகின்றார்.

நல்லாட்சி அரசாங்கத்தை விடவும் இந்த அரசாங்கம் இஸ்லாமிய கடும்போக்குவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் மெத்தனப் போக்கினை பின்பற்றப்படுகின்றது.

திருகோணமலையில் போதைக்கு அடிமையானவர்களுக்கான புதிய திட்டம்

திருகோணமலையில் போதைக்கு அடிமையானவர்களுக்கான புதிய திட்டம்

பௌத்த நாடு

தம்மை கல்லால் ட அடித்து கொலை செய்ய வேண்டுமென கிழக்கு மாகாணத்தில் துண்டுப் பிரசூரங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.

இஸ்லாமிய கடும் போக்குடன் முனீர் முழப்பர்.. ஞானசார தேரர் குற்றச்சாட்டு | Gnanasara Thero Statements About Easter Attack

தமிழீழ விடுதலைப் புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டாலும் அவர்களது கொள்கை ரீதியான போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

அதேவேளை, உலக அளவில் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்து வருவதாகவும், சிங்களவர்களுக்கு இருக்கும் ஒரே நாடு இந்த இலங்கை மட்டுமே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.   

சம்மாந்துறையில் மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் கசிப்பு பொருட்கள் மீட்பு

சம்மாந்துறையில் மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் கசிப்பு பொருட்கள் மீட்பு

அஷ்ரப்பின் இல்லம் உத்தியோகபூர்வமாக கையளிப்பு

அஷ்ரப்பின் இல்லம் உத்தியோகபூர்வமாக கையளிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW