அரசாங்க மருத்துவ அதிகாரிகள் வேலை நிறுத்தம் தொடர்பில் வெளியான தகவல்
நாடளாவிய ரீதியில் நாளையதினம் (05) அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் மேற்கொள்ளப்படவிருந்த வேலைநிறுத்த போராட்டத்தை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் இன்று (04) பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதன் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகதபால தெரிவித்துள்ளார்.
அறிக்கையில்..
இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட சங்கம்,
எதிர்வரும் மார்ச் 21 வரை தமது போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கிடையில் தமது கோரிக்கைகள் குறித்து மேலும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், 2025 வரவுசெலவுத் திட்டத்தில் கொடுப்பனவுகளில் கணிசமான குறைப்புக்கள் உள்ளது. இது மருத்துவ நிபுணர்களை பாதிக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |