வேலைநிறுத்தத்தில் குதிக்கும் துணை வைத்திய நிபுணர்கள்
துணை வைத்திய சேவைகளைச் சேர்ந்த ஆய்வக விஞ்ஞானிகள் மற்றும் இயன்முறை சிகிச்சையாளர்கள் இன்று (27) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தினை துணை வைத்திய தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சானக தர்மவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, இணை சுகாதார பட்டதாரிகளுக்கு ஏற்பட்ட அநீதி, பதவி உயர்வு பிரச்சினைகள் உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை மையமாக வைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், வேலை நிறுத்தத்தை தொடர்ந்து நடத்துவோம்.
வேலை நிறுத்தம்
மேலும், எதிர்காலத்தில் இந்த வேலை நிறுத்தத்திற்கு துணை வைத்திய சேவைகளைச் சேர்ந்த மற்ற தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளது என்று கூறியுள்ளார்.
இதேவேளை, வைத்தியர்களின் மேலதிக பணி மற்றும் விடுமுறை நாட்களுக்கான கொடுப்பனவுகளை குறைப்பது தொடர்பான சரியான சுற்றறிக்கையை ஒரு வாரத்திற்குள் வெளியிட வேண்டும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
இல்லையெனில் எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு தள்ளப்படுவோம் என்று அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |