அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples GMOA Sri Lanka Doctors Nalinda Jayatissa
By Rakshana MA Mar 02, 2025 09:11 AM GMT
Rakshana MA

Rakshana MA

தற்போதைய அரசாங்கத்தினால் அரசாங்க மருத்துவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை தீர்க்கத் தவறினால் தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகலாம் என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரித்துள்ளது.

இதன்படி, அரசாங்கம் மருத்துவர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் சேவையிலான சவால்கள் தீர்க்கப்பட வேண்டும் என GMOA கோரியுள்ளது.

அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் சந்திப்பு நடத்தியதாகவும், ஆனால் எந்த உடன்படிக்கையும் எட்டப்படவில்லை எனவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் சாமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவை குறித்த முறைப்பாடுகளை தெரிவிக்க QR குறியீட்டு முறைமை அறிமுகம்

சுகாதார சேவை குறித்த முறைப்பாடுகளை தெரிவிக்க QR குறியீட்டு முறைமை அறிமுகம்

மருத்துவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி குறித்த பிரச்சினைகளை விரிவாக ஆய்வு செய்ய மேலும் கால அவகாசம் வேண்டுமென என குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளுக்கு குடிப்பெயர்வது, தொழிற்சங்க நடவடிக்கைகள் எடுப்பது என்பது இறுதி கட்ட முயற்சியாக மட்டுமே இருக்கும்.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Gmoa Issues Warning Key Health Advisory

இதன்படி, இந்த வாரம் மீண்டும் ஜனாதிபதியையும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவையும் சந்திக்க உள்ளோம்.

இந்நிலையில், மருத்துவ துறைசார் அதிகாரிகள் அதிகளவில் வெளிநாடுகளுக்கு குடிப்பெயர்வது மற்றும் நிபுணர்கள் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.

2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் மருத்துவர்களின் கொடுப்பனைகள் மற்றும் விடுப்பு முறையில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், "மாலை 4 மணிக்குப் பிறகு பணியாற்ற முடியாத சூழ்நிலை உருவாகினால் இலங்கையில் சுகாதார சேவையை தொடர்ந்து வழங்க முடியாது" எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Gmoa Issues Warning Key Health Advisory

மேலும், சம்பள உயர்வு வழங்கப்பட்டாலும் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டதால் சம்பள அதிகரிப்பின் பலன்கள் கிடைக்கப் பெறாது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 

ரமழான் நாள் 01 : அல்லாஹ்வின் அருளை நாடுங்கள்

ரமழான் நாள் 01 : அல்லாஹ்வின் அருளை நாடுங்கள்

சம்மாந்துறை பகுதியில் அதிகரித்துள்ள நரிகளின் நடமாட்டம்

சம்மாந்துறை பகுதியில் அதிகரித்துள்ள நரிகளின் நடமாட்டம்

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW