பொதுத் தேர்தல்: அதிகரிக்கும் முறைப்பாடுகள்

Election Commission of Sri Lanka Crime General Election 2024
By Laksi Nov 06, 2024 10:14 AM GMT
Laksi

Laksi

பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை 1,794 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்தோடு, கடந்த 24 மணி நேரத்தில் 152 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், தேர்தல் குறித்த வன்முறை சம்பவங்கள் 3 பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 428 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1,313 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தின் புதிய திட்டம்

வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தின் புதிய திட்டம்

முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை

இதேவேளை, மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 18 முறைப்பாடுகளும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 35 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

பொதுத் தேர்தல்: அதிகரிக்கும் முறைப்பாடுகள் | General Election 1 794 Complaints Registered

அத்தோடு ,தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பான முறைப்பாடுகளே இதுவரை அதிகமாக கிடைக்கப்பெற்றுள்ளதுடன், இதுவரை 18 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இதுவரையான முறைப்பாடுகளில் 1483 முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் கண்டறியப்பட்ட நிலையில், 311 முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள்