தென் ஆப்பிரிக்காவில் ஆரம்பமான ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு!
South Africa
World Economic Crisis
World
By Fathima
இந்த ஆண்டுக்கான ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவில் இன்று (22) ஆரம்பமாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா தலைமையில் இந்த உச்சி மாநாடு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு
இந்த உச்சி மாநாட்டில் ஜி20 உறுப்பு நாடுகள் உட்பட 42 நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

முதல் முறையாக ஆப்பிரிக்க கண்டத்தில் நடைபெற்று வரும் ஜி20 உச்சி மாநாட்டில் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கான கடன் நிவாரணம், காலநிலை மாற்றம் , எரிசக்தி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன.