முஸ்லிம் மக்களுக்கான சேவை குறித்து இம்ரான் மகரூப் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை!
அண்மைக்காலமாக இலங்கை வானொலி முஸ்லிம் சேவையை விட வர்த்தக விளம்பரங்களே அதிகம் என்ற குற்றச்சாட்டுக்கள் மக்களால் முன்வைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவை, சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில் இருந்தே முஸ்லிம் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பு செய்கின்றன.
1950 இல் இருந்து முஸ்லிம் நிகழ்ச்சிக்கென தனியாக நேரம் ஒதுக்கப்பட்டு காலையும் மாலையும் ஒரு முஸ்லிம் சேவையாக இயங்கி வருகின்றது.
ஆனால் அண்மைக்காலமாக இலங்கை வானொலி முஸ்லிம் சேவையை விட வர்த்தக விளம்பரங்களே அதிகம் என்ற குற்றச்சாட்டுக்கள் மக்களால் முன்வைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
இது தொடர்பில் இம்ரான் மகரூப் எம்.பி உரையாற்றிய விடயங்களை இந்த காணொளியில் முழுமையாக காணலாம்...,