சாய்ந்தமருது தக்வா ஜும்ஆ பள்ளிவாசலுக்கு நிதியுதவி
சாய்ந்தமருது தக்வா ஜும்ஆ பள்ளிவாசலுக்கான நிதியினை பள்ளிவாசலின் நிருவாகத்தினரிடம் இன்று (04) ஜும்ஆ தொழுகையின் பின்னர் நாபீர் பௌண்டேசன் தலைவர் அல்-ஹாஜ் கலாநிதி உதூமான்கண்டு நாபீர் வழங்கி வைத்துள்ளார்.
அம்பாறை- கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது தக்வா ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய 1 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை இவர் வழங்கி வைத்தார்.
நிதியுதவி
அண்மையில் குறித்த பள்ளிவாசலுக்கு விஜயம் செய்திருந்த பொறியியலாளர் உதுமான் கண்டு நாபீர் நிர்வாகத்தினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளையேற்று அதற்கான உதவியை விரைவில் செய்வதாக வழங்கிய வாக்குறுதிக்கமைய இந்நிதியுதவிக்கான காசோலையை வழங்கியுள்ளார்.
மேலும் சாய்ந்தமருது தக்வா ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகம் பொறியியலாளர் உதுமாங்கண்டு நாபீருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




