இலங்கை வாழ் எரிபொருள் பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல்
இலங்கையின் பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்தினால் வெளியிடப்பட்ட விலைச்சூத்திரத்தின் படி எரிபொருள் விலைகள் 15 முதல் 20 ரூபாவிற்கு இடையில் குறைக்கப்படவுள்ளதாக முன்னாள் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நேற்று (18) மாத்தறையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார மக்கள் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உண்மை நிலவரம்
மேலும் தெரிவிக்கையில், வலுசக்தி அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் நான் தரகுப்பணம் வாங்குவதாக தேசிய மக்கள் சக்தி சுமத்திய குற்றச்சாட்டு ஆதாரமற்றவை.
அண்மையில் ஏற்பட்ட எரிபொருள் விலை மாற்றத்தின் மூலம் இந்த குற்றச்சாட்டுக்கள் பொய்ப்பிக்கப்பட்டுள்ளன.
நீண்ட காலமாக தேசிய மக்கள் சக்தி, எரிபொருள் விலை குறித்து வெளியிட்டு வந்த தகவல்களின் உண்மை நிலை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது, எரிபொருள் தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டவர்கள் மக்களுக்கு உண்மையை கூற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
விலைச் சூத்திரம்
செம்டம்பர் மாதம் 30ஆம் திகதியன்று வெளியிட்ட எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் இது நவம்பர் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |