சாய்ந்தமருதுவில் இலவச மருத்துவ முகாம்

Sri Lankan Peoples Eastern Province Kalmunai Medicines
By Rakshana MA Apr 14, 2025 11:21 AM GMT
Rakshana MA

Rakshana MA

அம்பாறை மாவட்டத்திலுள்ள சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம் ஒன்று முன்னெடுக்கப்ட்டுள்ளது.

இன்று(14) காலை 7.30 மணி முதல் 12.00 மணி வரை நம்பிக்கையாளர் சபையின் தலைவர் வைத்தியர் எம்.எச்.கே.சனூஸ் காரியப்பர் தலைமையில் பள்ளிவாசல் வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.

மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலவச மருத்துவ முகாம்

தற்போது சமூகத்தில் தொற்றா நோய்களான மாரடைப்பு உயர் குருதியமுக்கம் போன்றன இளம் வயதிலேயே பொதுமக்களை கொல்லும் நோய்களாக காணப்படுகின்றன. ஆகவே ஆரம்பத்திலேயே இந்நோய்களை கண்டுபிடிப்பதன் மூலமாக இந்த நோய்களின் அகோர தன்மையை சமூகத்தில் களையக் கூடியதாக இருக்கும்.

சாய்ந்தமருதுவில் இலவச மருத்துவ முகாம் | Free Medical Camp At Sainthamaruthu

அதன் அடிப்படையில் இந்த இலவச மருத்துவ முகாமில் இரத்தத்தில் சீனி (FBS), இரத்த அழுத்த (BP)பரிசோதனை,உடல் நிறை குறியீட்டெண் (BMI) மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் இம்மருத்துவ முகாமில் பல பகுதிகளில் இருந்தும் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டமை எமக்கு உற்சாகத்தை வழங்கியுள்ளது என நம்பிக்கையாளர் சபையின் தலைவர் வைத்தியர் எம்.எச்.கே. சனூஸ் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருதுவில் இலவச மருத்துவ முகாம் | Free Medical Camp At Sainthamaruthu

குறித்த இலவச மருத்துவ முகாமில் இரத்த அழுத்தம், இரத்தத்தில் சீனியின் அளவு, மிகையான உடற்பருமன், பொது வைத்தியம் உட்பட பல வைத்திய சிகிச்சைக்கான ஆலோசனைகளை 200 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள், வர்த்தகர்கள், பெண்கள் கலந்துகொண்டு பயன்களைப் பெற்றுள்ளனர்.

குறித்த நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக், சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரியபள்ளி வாசலின் செயலாளரும் பொறியியலாளருமான எம்.எம்.எம்.முனாஸ் உள்ளிட்ட சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபை பிரதிநிதிகளுக்கும் பங்கேற்றிருந்தனர்.

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதேச சபைத் தேர்தல் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதேச சபைத் தேர்தல் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம்

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான தகவல்

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான தகவல்

          நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery