மட்டக்களப்பில் திடீர் சுற்றிவளைப்பு: பல வர்த்தகர்கள் மீது வழக்கு தாக்கல்
மட்டக்களப்பு - காத்தான்குடி பகுதியிலுள்ள நான்கு உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டதுடன், 54 பேர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹோட்டல்கள், உணவகங்கள், சிற்றுண்டிசாலைகள் மீது சுகாதார அதிகாரிகள் நேற்று மாலை திடீர் சுற்றிவளைப்பினை மேற்கொண்டனர்.
வழக்கு தாக்கல்
இதன்போது, மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்த, பழுதடைந்த, காலாவதியான, பிளாஸ்டிக் பாத்திரங்களில் உணவுப் பொருட்களை விற்பனை செய்த, வர்த்தக நிலையங்களில் வர்த்தகர்கள் 9 பேர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், நான்கு உணவகங்கள் சீல் வைத்து மூடப்பட்டுள்ளன.
அத்தோடு, மருத்துவ சான்றிதழ் இல்லாமல் உணவகங்கள் சிற்றுண்டிசாலைகளில் பணியாளர்களாக பணிபுரிந்த 45 பேர் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீதும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.
சுமார் 6 மணித்தியாலங்கள் வரை இடம்பெற்ற சோதனைகளின் பின் போது பெருமளவிலான பழுதடைந்த மனித பாவனைக்கு உதவாத காலாவதியான உணவுப் பொருட்கள் சுகாதார அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |