மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ்
திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேசத்தில் நேற்று(08)மாலை தேசிய காங்கிஸ் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டுள்ளார்.
இதில் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பல தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன.
மக்கள் சந்திப்பு
மேலும், பொதுமக்களின் தேவைகளும் கலந்தாலோசிக்கப்பட்டு, அவற்றினை மிக விரைவாக நிவர்த்தி செய்வது தொடர்பிலும், மூதூர் பிரதேசங்களுக்கு பல அபிவிருத்திக்கான வேலை திட்டங்கள் முன்னெடுப்பது தொடர்பிலும், பல வேலை திட்டங்கள் செய்திருப்பதாகவும் மக்களுக்கு தெளிவுபடுத்தி உள்ளார்.
இந்நிலையில், மீண்டும் மக்கள் சந்திப்பை மேற்கொள்ள இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மக்கள் சந்திப்பில், கட்சியின் உப தலைவர் ஏ.உதுமான் லெப்பை, தேசிய அமைப்பாளர் எம்.வை.எம்.சியா மற்றும் மூதூர் மத்திய குழு தலைவர் ஏ.எஸ்.எம்.நிஹார் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

