இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலுக்கு விசா இன்றி தடுமாறும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள்

Sri Lanka Election srilanka presidential election 2024
By Rukshy Sep 14, 2024 06:48 AM GMT
Rukshy

Rukshy

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல்களைப் பற்றி செய்தி சேகரிக்க முயற்சிக்கும் சர்வதேச ஊடகவியலாளர்கள், விசா தாமதங்கள் அல்லது விசா மறுப்புக்களை எதிர்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அனைத்து நடைமுறைகளை பின்பற்றியும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பலருக்கு இன்னும் விசா அனுமதி கிடைக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் பணி இன்றுடன் நிறைவு

தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் பணி இன்றுடன் நிறைவு

வெளிநாட்டு ஊடக நிறுவனங்கள்

இதனையடுத்து, இலங்கையின் வெளிநாட்டு செய்தியாளர் சங்கம், நிலைமைக்குறித்து,பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

தங்கள் நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மூலம் விசாவிற்கு விண்ணப்பித்த தமது சக ஊடகவியலாளர்கள் விசாக்களை பெறமுடியாதுள்ளதாக செய்தியாளர் சங்கம், அலஸிடம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலுக்கு விசா இன்றி தடுமாறும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் | Foreign Journalists Stumble Sl Prez Election

கடந்த காலங்களில், இந்த விசாக்கள், இலங்கையின் தகவல் திணைக்கள இயக்குநரின் அங்கீகாரத்தின் கீழ் வழங்கப்பட்டன. எனினும் தற்போது குறித்த நடைமுறை பின்பற்றப்படவில்லை.

வழமையாக, வெளிநாட்டு ஊடக நிறுவனங்கள் முறையான அங்கீகாரம் இல்லாமல் தமது செய்தியாளர்களை ஏனைய நாடுகளுக்கு செய்தி சேகரிப்புக்களுக்காக அனுப்பப்போவதில்லை.

எனவே, இந்த விடயத்தில் தலையிட்டு செய்தியாளர்களுக்கு விசா அனுமதிகளை பெற்றுக்கொடுக்கவேண்டும் என்று இலங்கையின் வெளிநாட்டு செய்தியாளர் சங்கம் கோரியுள்ளது.  

9 நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகை

9 நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகை

ரணிலின் ஆட்சியில் பொருளாதார தன்மை ஸ்திரமடையவில்லை: இம்ரான் மஹ்ரூப் பகிரங்கம்

ரணிலின் ஆட்சியில் பொருளாதார தன்மை ஸ்திரமடையவில்லை: இம்ரான் மஹ்ரூப் பகிரங்கம்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW