ரணிலின் ஆட்சியில் பொருளாதார தன்மை ஸ்திரமடையவில்லை: இம்ரான் மஹ்ரூப் பகிரங்கம்

Namal Rajapaksa Ranil Wickremesinghe Sajith Premadasa Imran Khan Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 13, 2024 03:47 PM GMT
Laksi

Laksi

 நாட்டில் வரிசையை இல்லாமல் ஆக்கியதாக ரணில் விக்ரமசிங்க சொல்கிறார்.ஆனாலும் மக்களுடைய பொருளாதார தன்மை ஸ்திரமடையவில்லை திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, ரணிலின் ஆட்சிக்குப் பின்னர் தான் ராஜபக்சர்களின் குடும்பம் மீண்டும் தாண்டவமாடுகின்ற நிலை காணப்படுகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவை ஆதரித்து சீனக்குடா பகுதியில் இன்று (13) இடம் பெற்ற நிகழ்வின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக சீதா அரம்பேபொல பதவிப் பிரமாணம்

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக சீதா அரம்பேபொல பதவிப் பிரமாணம்

ஜனாதிபதி தேர்தல்

அவர் மேலும் தெரிவிக்கையில், மக்கள் நல்லதொரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் இந்த மாற்றம் மக்களுக்கு நன்மையளிக்குப் தருணத்தில் ஜனாதிபதி தேர்தல் வந்துள்ளது.

ரணிலின் ஆட்சியில் பொருளாதார தன்மை ஸ்திரமடையவில்லை: இம்ரான் மஹ்ரூப் பகிரங்கம் | Presidential Election Sajith Support Imran

2019 இல் இனவாதம் தலை தூக்கிய போது வாக்களித்தவர்கள் நாட்டை விட்டு ஓடினார்கள். எந்த மேடைகளை பார்த்தாலும் சஜீத் பிரேமதாசவை பற்றி விமர்சிக்கிறார்கள்.

நாட்டில் வரிசையை இல்லாமால் ஆக்கியதாக ரணில் விக்ரமசிங்க சொல்கிறார் அது ஒரு புறம் இருக்க ஆனாலும் மக்களுடைய பொருளாதார தன்மை ஸ்திரமடையவில்லை . ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில் மஹிந்தவின் குடும்பம் மீண்டும் நாட்டில் தாண்டவமாடுகிறது.

சகல முஸ்லிம் அமைப்புகளும் ரணிலுக்கே ஆதரவு: முஸ்லிம் இடதுசாரி முன்னணி

சகல முஸ்லிம் அமைப்புகளும் ரணிலுக்கே ஆதரவு: முஸ்லிம் இடதுசாரி முன்னணி

சஜித்திற்கு வாக்கு

ரணில் விக்ரமசிங்க நாட்டை பாரமெடுத்த பின்னர் தான் நாமல் தேர்தலில் போட்டியிடுகிறார் . ரணிலுடன் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ராஜபக்சர்களின் கடைக்கு சென்றவர்களே.

ரணிலின் ஆட்சியில் பொருளாதார தன்மை ஸ்திரமடையவில்லை: இம்ரான் மஹ்ரூப் பகிரங்கம் | Presidential Election Sajith Support Imran

சஜித் பிரேமதாச பல உதவிகளை இன,மத பேதமற்ற உதவிகளை செய்துள்ளார் இன பிரதேச வாதமற்ற தலைவர் தான் அவர் எனவே இவருக்கு வாக்குகளை அளிக்க வேண்டும் என்பதே எல்லோரதும் வேண்டுகோளாக காணப்படுகிறது என இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW