இஸ்ரேலில் இலங்கையர்கள் பயணித்த பேருந்தில் தீ விபத்து
இஸ்ரேலில் (Israel) இலங்கை (Sri Lanka)இளைஞர்களை ஏற்றிச் சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் விவசாயத் துறையில் பணிபுரியும் 20 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற நிறுவனம் ஒன்றின் போக்குவரத்து பேருந்து ஒன்ரே இவ்வாறு தீப்பிடித்து எரிந்துள்ளது.
மேலும், பேருந்தின் கதவுகள் பூட்டப்பட்டிருந்த நிலையில், அதில் பயணித்தவர்கள் ஜன்னல்களை உடைத்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை இளைஞர்கள்
எனினும் அசம்பாவிதங்கள் எவையும் பதிவு செய்யப்படாத நிலையில், ஜன்னலில் இருந்து குதிக்கும் போது விழுந்து முழங்காலில் காயமடைந்த நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
பேருந்து தீப்பிடித்து சில நிமிடங்களில் முழுமையாக தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனமும் அவர்களின் செயல்பாடுகளை அவதானித்து வருவதாகவும், ஏனைய தரப்பினர் வழமை போன்று தங்களது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |