மட்டக்களப்பில் தனியார் வகுப்புகளுக்கு தடை! வெளியான அறிவிப்பு
மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஞாயிறு மற்றும் போயா தினங்களில் தனியார் வகுப்புக்கள் நடாத்த தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாநகரசபையின் 8ஆவது சபையின் இரண்டாவது சபை அமர்வு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் சபை சபா மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது, விளம்பர பலகைகள் தமிழ் மொழியில் கட்டாயம் பொறிக்கப்படல், கட்டாக்காலி மாடுகள், நாய்களை கட்டுப்படுத்தல் உட்பட 9 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தனியார் வகுப்பு
இந்த அமர்வின் போது, மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்களிலுள்ள தனியார் கல்வி நிலையங்களில் இடம்பெற்று வரும் பிரத்தியோக வகுப்புக்களை ஞாயிறு மற்றும் போயா தினங்களில் சட்டரீதியாக தடை செய்ய வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது.
செம்மணி புதைகுழி படுகொலையை கண்டித்து அதனை சர்வதேச கண்காணிப்புடன் அரசு விசாரணை செய்யவேண்டும் எனவும் மாநகரசபையின் சரியான எல்லையை உறுதிப்படுத்தி எல்லையில் வரவேற்பு கோபுரங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன.
மேலும், மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்களில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் இரத காட்சிப்படுத்தப்படும் விளம்பர பலகையில், முதலில் தமிழ் மொழி கட்டாயம் இருக்கவேண்டும் என கோரப்பட்டது.
அதனை தொடர்ந்து, வீதிகளில் உலாவும் கட்டாக்காலி நாய்கள் மற்றும் மாடுகளால் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளது.
எனவே இந்த கட்டாக்கலி மாடுகள், நாய்களை கட்டப்படுத்துமாறும் திராய்மடு, நாவற்கேணி தொடருந்து கடவையில் நிரந்தரமாக கடவைய் காப்பாளர்களை நியமிக்குமாறு தொடருந்து திணைக்களத்தை வலியுறுத்துமாறும் பிரேரணையை கொண்டு வரப்பட்டது.
முக்கிய கலந்துரையாடல்
மாநகரசபைக்கு உட்பட்ட அனைத்து பூங்காக்களுக்கும் பாதுகாப்பு உத்தியோகத்தரை நியமிக்குமாறும், வீதி விபத்துக்களை தடுப்பதற்கான பிரேரணையும் திருப்பெரும்துறை சேத்துக்குடா பகுதிகளில் உள்ள விபுலானந்தா வீதி மற்றும் விநாயகர் வீதி ஆகிய இரு வீதிகளையும் ஒருவழி பாதையாக மாற்றுமாறும் முன்மொழியப்பட்டது.
அதேவேளை, கள்ளியங்காடு மயானத்துக்கு அருகில் கொழும்பு பொரளையில் உள்ள மலர்சாலைகள் போன்று ஒரு மலர்சாலையை மரக்கூட்டுத்தாபன பகுதியில் அமைக்க அரசகாணியை பெறுவதற்கான ஒரு பிரேரணையை கொண்டு வரப்பட்டது.
மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் இடம்பெற்று வரும் வீதி வியாபாரத்தில் தடை செய்து அதற்கு ஒரு தீர்வு காண்பதற்காக பெண் உறுப்பினர் ஒருவர் உட்பட 5 பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டு உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்ட அனைத்து பிரேரணைகளும் சபை குழுநிலைவிவாதத்துக்கு விடப்பட்டு அவைகள் முன்மொழிந்து வழிமொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


