கல்முனையில் வீடொன்றில் தீ விபத்து!
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கல்முனைக்குடி(Kalmunaikudi) பகுதியில் நேற்று(07) வீடொன்று தீப்பற்றி எரிந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இதில் பெறுமதியான சில பொருட்கள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை
இந்நிலையில் குறித்த தீப்பரவல் இடம்பெற்ற வேளையில் வீட்டினுள் இருந்தவர்கள் அபாய உதவி கோரி வீட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளதுடன், வீட்டிற்கு அருகில் காணப்பட்டவர்களின் உதவியுடன் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
குறித்த தீப்பரவல் சம்பவத்தின் போது மாநகர சபையின் தீ அணைப்பு பிரிவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் உரிய இடத்திற்கு வருகை தரவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அங்கு வருகை தந்த இலங்கை மின்சார சபை அதிகாரிகள் மின் ஒழுக்கினால் தீ விபத்து ஏற்பட்ட பகுதியை சீர் செய்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

