தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு வெளியான எச்சரிக்கை
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான செலவின அறிக்கைகளை வழங்காத வேட்பாளர்களின் பெயர்களை பொலிஸ் திணைக்களத்திற்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்தோடு, ஜனாதிபதித் தேர்தல் மற்றும் எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் செலவு அறிக்கையை வழங்காத பெயர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு அது தொடர்பான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
அதற்கமைய, நாடாளுமன்றத் தேர்தல் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை வழங்குவதற்கான அறிவிப்பின்படி, அத்தகைய அறிக்கையை சமர்ப்பித்த வேட்பாளர்களின் பெயர் பட்டியல் மாவட்ட செயலகங்கள் மற்றும் தேர்தல் அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலைமையை கருத்திற் கொண்டு, தேர்தல் ஆணைக்குழு தமது செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்களின் பட்டியலை பொலிஸ் திணைக்களத்திற்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |