அரிசி மூட்டைகளை திருடிய இருவர் கைது
Kalutara
Western Province
Crime
By Laksi
களுத்துறை மத்திய சந்தி பகுதியில் மொத்த அரிசி விற்பனை செய்யப்படும் கடையொன்றில் அரிசியை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது களுத்துறை தெற்கு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, சுமார் 1000 கிலோ அரிசியை குறித்த நபர்கள் திருடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருவர் கைது
இரவு வேளையில் இரண்டு முச்சக்கர வண்டிகளைப் பயன்படுத்தி இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளமை அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து, குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |