திருகோணமலையில் நிதியறிவுக் கண்காட்சி
இலங்கை மத்திய வங்கி திருகோணமலை பிராந்தியத்தின் ஏற்பாட்டில் இன்று(22.10.2025) திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் நிதியறிவுக் கண்காட்சி இடம்பெற்றது.
குறித்த கண்காட்சியில் வங்கிச் சேவைகள், கொழும்பு பங்கு பரிவர்த்தனை, முதலீட்டு வழிகாட்டல்கள், ஊழியர் சேமலாப நிதியச் சேவைகள், ஊழியர் நம்பிக்கை நிதிய சேவைகள், கொடுகடன் தகவல் பணியகத்தினுடைய சேவைகள் உள்ளிட்டவையும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சி வழிகாட்டல்கள், தொழில்முயற்சியாளர் சந்தை, நாணய அரும்பொருட் காட்சியகம் என்பனவும் இடம்பெற்றன.
அத்துடன், ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றில் தங்களுடைய தேவைகளை இலகுவாக பெற்றுக் கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கபெற்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





