எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Sri Lanka Politician
M.L.A.M. Hizbullah
By Faarika Faizal
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு “The Y Personality of the Year 2025” என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
Cinnamon Life – City of Dreams வளாகத்தில் நேற்று(20.10.2025) நடைபெற்ற அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கப் பேரவையின் 75வது ஆண்டு மாநாட்டில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
சமூகத்திற்கும் நாட்டிற்கும் விலைமதிப்பற்ற மற்றும் பெறுமதியான சேவைகளை வழங்கியதற்கான அங்கீகாரமாக இந்த விருது ஹிஸ்புல்லாஹ்வுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விருதை இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதிச் சபாநாயகர் வைத்தியர் றிஸ்வி சாலிஹ் வழங்கி கௌரவித்தார்.
You May Like This Video...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |