மட்டக்களப்பில் தொடர் மழையால் அழிவடைந்துள்ள வயல்கள்

Batticaloa Sri Lankan Peoples Floods In Sri Lanka
By Rakshana MA Jan 21, 2025 10:47 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு(Batticaloa) மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் மாவட்டத்திலுள்ள குளங்கள் நிரம்பியுள்ள காரணத்தினால் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள பல ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

நீரில் மூழ்கிய வயல் நிலங்கள் பல அழிவடைந்துள்ளன. இந்த நிலைமை தொடருமானால் இன்னும் பல ஆயிரம் ஏக்கர் அழிவடையும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அக்கரைப்பற்று வைத்தியசாலை அபிவிருத்தி! அபிவிருத்திக்குழுவுடன் கலந்துரையாடிய பிராந்திய பணிப்பாளர்

அக்கரைப்பற்று வைத்தியசாலை அபிவிருத்தி! அபிவிருத்திக்குழுவுடன் கலந்துரையாடிய பிராந்திய பணிப்பாளர்

திறக்கப்பட்டுள்ள வான்கதவுகள் 

மேலும், உன்னிச்சை குளத்தில் 32.5 அடி தண்ணீர் உள்ளதாகவும் குளத்தில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் மூன்று வான்கதவுகளும் 5 அடிக்கு திறந்து விடப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. இதன் காரணத்தால் தாழ்நிலங்கள் நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளன.

மட்டக்களப்பில் தொடர் மழையால் அழிவடைந்துள்ள வயல்கள் | Fields Destroyed By Continuous Rains In Batticaloa

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் வெள்ளம் தொடர்பில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்

அதில் அவர் குறிப்பிடுகையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரிய குளங்களான உன்னிச்சை மற்றும் நவகிரி உட்பட பல குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமை காரணமாக ஆற்றினை அண்டிய பிரதேசங்கள் மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும்.

அத்துடன் நீர்மட்டம் அதிகரிக்குமாயின் தாழ்நிலப் பகுதிகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல தயாராக இருப்பதுடன் கடல், ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் நீராடுவதை தவிர்ப்பதுடன் மீன்பிடி நடவடிக்கைகளில் மிக அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என சியாத் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றம் இன்று கூடுகின்றது

நாடாளுமன்றம் இன்று கூடுகின்றது

மீண்டும் அரிசி தட்டுப்பாடு ஏற்பட ஒருபோதும் இடமளிக்கப்படாது: ஜனாதிபதி அநுர

மீண்டும் அரிசி தட்டுப்பாடு ஏற்பட ஒருபோதும் இடமளிக்கப்படாது: ஜனாதிபதி அநுர

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGallery