சாய்ந்தமருது பிரதேசத்தில் சுகாதாரத் துறையினரின் அதிரடி நடவடிக்கை

Batticaloa Healthy Food Recipes Eastern Province Kalmunai Public Health Inspector
By Rakshana MA Dec 24, 2024 08:39 AM GMT
Rakshana MA

Rakshana MA

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பிரிவுகளில் உணவுப் பண்டங்கள் விற்பனை செய்யும் நிலையங்களில் திடீர் களப் பரிசோதனைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சகிலா இஸ்ஸதீனின் ஆலோசனைக்கமைய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதனின் தலைமையில் இந்தக் களப் பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளன.

சேதமடைந்த வீதிகளை புனரமைப்பு செய்யும் பணிகளை விரைவுபடுத்துங்கள் - ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

சேதமடைந்த வீதிகளை புனரமைப்பு செய்யும் பணிகளை விரைவுபடுத்துங்கள் - ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை

சுகாதாரம் பேணாத நிறுவனங்கள்

பொதுச்சுகாதார பரிசோதகர்கள், டெங்கு களத்தடுப்பு பணியாளர்கள் அடங்கிய குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையின் போது முறையற்ற வகையில் உணவு தயாரிக்கும் மூன்று நிறுவனங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளன.

சாய்ந்தமருது பிரதேசத்தில் சுகாதாரத் துறையினரின் அதிரடி நடவடிக்கை | Field Inspections By Phi In Sainthamaruthu

மேலும் இந்த மூன்று நிறுவனங்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதுடன், டெங்கு பரவும் வகையில் சுற்றுச்சூழலை அசுத்தமாக வைத்திருந்தவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது என சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த திடீர் களப் பரிசோதனையின் போது மூன்று உணவகங்கள், மரக்கறி விற்பனை நிலையங்கள் மற்றும் பழக்கடை போன்றனவும் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டன என்றும் மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தவும், ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டும் தங்களது பணி என்றும் தொடரும் என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதன் தெரிவித்துள்ளார்.

ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்

ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்

கல்முனையில் போதைப்பொருளுடன் கைதான 24 வயது இளைஞர்கள்

கல்முனையில் போதைப்பொருளுடன் கைதான 24 வயது இளைஞர்கள்

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGallery