நாமல் ராஜபக்சவை புறக்கணித்த குடும்ப உறுப்பினர்கள்

Mahinda Rajapaksa Namal Rajapaksa Rajapaksa Family Election
By Shalini Balachandran Aug 08, 2024 10:26 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை(Namal Rajapaksa) நியமிக்கும் நிகழ்வில் ராஜபக்ச குடும்பத்தைச்(Rajapaksa family) சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்ளாதது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவைத்(basil rajapaksa) தவிர, ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த வேறு எவரும் கலந்து கொள்ளவில்லை.

அம்பாறையில் வீதியோரங்களில் திரியும் கட்டாக்காலி மாடுகள்: பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை

அம்பாறையில் வீதியோரங்களில் திரியும் கட்டாக்காலி மாடுகள்: பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதி 

இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajapaksa), முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச(Chamal Rajapaksa), நாடாளுமன்ற உறுப்பினர் சசீந்திர ராஜபக்ச(Shashindra Rajapaksa), நாமல் ராஜபக்சவின் சகோதரர்களான யோஷித ராஜபக்ச(Yoshita Rajapaksa), ரோஹித ராஜபக்ச(Rohitha Rajapaksa) மற்றும் அவரது தாயார் ஷிரந்தி ராஜபக்ச(Shiranthi Rajapaksa) ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

நாமல் ராஜபக்சவை புறக்கணித்த குடும்ப உறுப்பினர்கள் | Family Members Who Boycotted Namal Rajapaksa

ஜனாதிபதி வேட்பாளரை கட்சி முன்னிறுத்துவது தொடர்பாக ராஜபக்ச குடும்பத்தில் கடும் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜப்பானில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW