ஜப்பானில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானின் தெற்கு தீவுப்பகுதியில் உள்ள கியூஷு பகுதியில் இன்று (8) அடுத்தடுத்து இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கமானது முதலில் 6.9 ரிக்டர் அளவிலும், அதன்பிறகு 7.1 அளவிலும் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுனாமி எச்சரிக்கை
ஜப்பானின் தெற்கு பிரதான தீவான கியூஷூவின் கிழக்கு கடற்கரையில் சுமார் 30 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், கியூஷு மற்றும் ஷிகோகு ஆகிய மேற்கு தீவுகளின் பசிபிக் கடற்கரையில் கடல் மட்டம் ஒரு மீட்டர் உயரும் அபாயம் இருப்பதாக ஜப்பான் அதிகாரிகள் தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலநடுக்கங்களால் மக்கள் பெரும் அச்சத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |