திருகோணமலையில் விவசாய காணிகள் அபகரிப்பு : குகதாசன் எம்.பி பகிரங்கம்

Sri Lanka Parliament Trincomalee Ranil Wickremesinghe Eastern Province
By Laksi Aug 17, 2024 10:36 AM GMT
Laksi

Laksi

திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 43ஆயிரம் ஏக்கர் விவசாய காணிகள் எல்லையிடப்பட்டு அபகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்தோடு, இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியிடம் பேசிய போது உரிய அமைச்சர்களுடன் கதைத்து தீர்வை பெற்றுத்தருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை - புல்மோட்டை பகுதியில் தமிழ், முஸ்லிம் மக்களுடனான நேற்று (16) இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வாக்காளர்கள் நுகர்வோராக மாறுவதற்கு இடமளிக்கக்கூடாது! தேர்தல் ஆணையாளர் நாயகம்

வாக்காளர்கள் நுகர்வோராக மாறுவதற்கு இடமளிக்கக்கூடாது! தேர்தல் ஆணையாளர் நாயகம்

பிரச்சினைகளுக்கான தீர்வு

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”குச்சவெளி பிரதேச செயலக பகுதியில் 10435 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறான விவசாய நிலங்களுக்கான குளங்கள் வாய்க்கால்கள் காணப்படுகிறது.

திருகோணமலையில் விவசாய காணிகள் அபகரிப்பு : குகதாசன் எம்.பி பகிரங்கம் | Expropriation Many Acres Agricultural Land Trinco

இது தொடர்பில் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து உரிய பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்காக முயற்சிக்கின்றேன்.

மேலும் திருகோணமலையில் 500 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுகின்றதுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில்100 சிற்றூழியர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுகிறது. இதனால் சத்திர சிகிச்சைகள் தள்ளிப்போடப்படுகின்றன.

இயற்கை எரிவாயு விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இயற்கை எரிவாயு விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

ஒத்துழைப்பு

வெளிநாடுகளில் வைத்தியர்கள் இல்லாமல் அறுவை சிகிச்சை இடம்பெறுகின்ற போதும் இங்கு சிற்றூழியர்கள் உதவிக்காக இன்மையால் பிற்போடப்படுகிறது.கல்வி, சுகாதாரம், சமூக மேம்பாடு உள்ளிட்ட விடயங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டு கட்சி வேறுபாடுகளின்றி ஒன்றிணைந்து செயற்படுவோம்.

திருகோணமலையில் விவசாய காணிகள் அபகரிப்பு : குகதாசன் எம்.பி பகிரங்கம் | Expropriation Many Acres Agricultural Land Trinco

1976இன் பின்னர் கட்டுக்குளப் பகுதிக்கு நானே முதல் நாடாளுமன்ற பிரதிநிதி. புல்மோட்டை, திரியாய், குச்சவெளி என்ற பிரதேச பாகுபாடின்றி அனைத்து சேவைகளையும் சரிவர சரியாக செய்வேன் இதற்கான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.

பிரான்ஸ் நாட்டின் அதிபதியான நெப்போலியன் கூறியது போன்று "பல காலம் பேச்சாளராக இருப்பதை விட சில மணி நேரம் செயலாளராக இருப்பது சிறந்தது" எனத் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த சந்திப்பில் முன்னாள் குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் முபாரக் உட்பட பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கையில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW