2025ஆம் ஆண்டுக்கான ஏற்றுமதி வருமானத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Economy of Sri Lanka Money Online business Export
By Rakshana MA Feb 27, 2025 05:52 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் இந்த வருடம் ஜனவரி மாதத்தில் அதிகரித்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

இதன்படி 2025 ஜனவரி மாதத்தில், 1.3 பில்லியன் டொலரைக் கடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

சம்மாந்துறையில் உணவகங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

சம்மாந்துறையில் உணவகங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

அதிகரித்த வருமானம் 

இலங்கைக்கான ஏற்றுமதி வருவாய் தொடர்பில் அந்த சபை தொடர்ந்தும் கூறுகையில்,

இந்த ஆண்டு ஜனவரியில் பொருட்கள் மற்றும் சேவைகள் உட்பட மொத்த ஏற்றுமதி வருவாய் 1,334.19 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான ஏற்றுமதி வருமானத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Export Earning Increase At Sri Lanka

இதேவேளை, கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, ​​பொருட்கள் ஏற்றுமதி வருவாயில் 3.51 சதவீத அதிகரிப்பும், விவசாய ஏற்றுமதி வருவாயில் 14.87 சதவீத அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், தொழில்துறை ஏற்றுமதி வருவாயில் 0.08 சதவீதமும், சேவை ஏற்றுமதி வருவாயில் 37.87 சதவீதமும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காலி முகத்திடலில் காட்சிப்படுத்திய வாகனங்களுக்கு என்ன ஆனது..

காலி முகத்திடலில் காட்சிப்படுத்திய வாகனங்களுக்கு என்ன ஆனது..

தொடருந்து சாரதிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!

தொடருந்து சாரதிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW