பரீட்சை எழுதவுள்ளோருக்கு விசேட அறிவிப்பு

Ministry of Education Sri Lanka Department of Examinations Sri Lanka G.C.E. (O/L) Examination Education
By Rakshana MA May 24, 2025 12:10 PM GMT
Rakshana MA

Rakshana MA

அறநெறி பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரீட்சை மற்றும் 2024ஆம் ஆண்டுக்கான சாதாரண தர அழகியல் நடைமுறைப் பரீட்சைகளை இன்று (24) மற்றும் நாளை (25) எழுதவுள்ள மாணவர்களுக்கு சிறப்பு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த விசேட அறிவிப்பை இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

காத்தான்குடி கடல் பிரதேசத்தில் கடுமையான கடல் கொந்தளிப்பு

காத்தான்குடி கடல் பிரதேசத்தில் கடுமையான கடல் கொந்தளிப்பு

பரீட்சை எழுதவுள்ளோருக்கு அறிவித்தல்

ஒரு மாணவர் ஒரே நாளில் இந்த இரண்டு பரீட்சைகளையும் எழுத வேண்டியிருந்தால், அவர்களுக்கு க.பொ.த.சாதாரண தர நடைமுறைப் பரீட்சைகளுக்கு வேறொரு திகதி கிடைக்கக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பரீட்சை எழுதவுள்ளோருக்கு விசேட அறிவிப்பு | Examination Department Sri Lanka

மேலும், அறநெறிப் பாடசாலை இறுதிச் சான்றிதழ் தேர்வுக்காகப் பெறப்பட்ட சேர்க்கைப் படிவம் மற்றும் வழங்கப்பட்ட சேர்க்கைப் படிவம் அல்லது அதன் சான்றளிக்கப்பட்ட நகலை அடுத்த செவ்வாய்க்கிழமைக்கு முன் சம்பந்தப்பட்ட கல்வி வலயத்தின் அழகியல் கல்விப் பணிப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அக்கறைப்பற்றில் ஆசியர் மற்றும் அதிபர் மீது வாள்வெட்டு

அக்கறைப்பற்றில் ஆசியர் மற்றும் அதிபர் மீது வாள்வெட்டு

அம்பாறையில் முக்கிய போதைப்பொருள் வியாபாரி கைது

அம்பாறையில் முக்கிய போதைப்பொருள் வியாபாரி கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW