குற்றவியல் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கைது
CID - Sri Lanka Police
Sri Lanka Police
Colombo
Crime
By Laksi
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் (CCD) முன்னான் பணிப்பாளர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (9) குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது
கடத்தல் மற்றும் சட்டவிரோதமாக சிறையில் அடைத்தல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ,இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை முழுமையான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |